iday, September 11, 2009
(Running Scared)18+போலீஸ் துப்பாக்கியும்...இடைவிடாத துரத்தலும்....
பிரச்சனைகளை கண்ணுக்கு தெரிந்தால் களைந்து விடலாம் ஆனால் பிரச்சனை வரவே வராது என்ற திடமாக நம்பும் விஷயத்தில் பிரச்சனை வந்தால் எப்படி இருக்கும்...
நாம் சில கணக்குகள் போட்டு இருப்போம் அனால் அந்த கணக்கை தவிடு பொடி ஆக்கி நம் வாழ்க்கையையே புரட்டி போடும் நிகழ்வுகளை நாம் அறிந்து இருப்போம்..
நம் வீட்டு பிள்ளைகளால் பிரச்சனை வந்தாலே நம்மால் தாங்க முடியாது.. ஆனால் பக்கத்து வீட்டு பிள்ளையால் பிரச்சனை வந்தால் எப்படி இருக்கும் ஓங்கி ஒரு மி்தி மிதிக்கலாம் என்று தோன்றும் அல்லவா?... அதுவும் வாழ்நாள் முழுவதும் களி திங்க வேண்டிய பிரச்சனைதான் அதனை எப்படி தீர்க்கின்றான் என்பதுதான் ரன்னிங் ஸ்கிரேட் படத்தின் கதை...

Running Scared படத்தின் கதை இதுதான்......
Joey Gazelle (Paul Walker) ஒரு சின்ன லெவல் மாபியா கும்பல் கிட்ட வேலைபாக்குறவன்...போதை மருந்தையும் பணத்தையும் கைமாத்தும் போது , முகமுடி அணிந்த ஒரு கும்பல் இவர்களிடம் இருந்து போதை மருந்து மற்றும் ரொக்க பணத்தையும் துப்பாக்கி முனையில் மிரட்டி பறிக்கும் போது , வழக்கம் போல் துப்பாக்கி சண்டை நடக்க.. அதில் முகமுடி கும்பலை, ஜோயி வேலை செய்யும் மாபியா குழு துப்பாக்கி சண்டையில் வெற்றி பெற்று... முகமுடி அவுத்து பார்த்தால் அது கெட்ட போலிஸ்...

சரி என்று அந்த போலிஸ் பயண் படுத்திய துப்பாக்கியை பத்திரமாக ஜோயிடம் கொடுத்து வீட்டில் வைக்க சொல்லுகின்றான்... வீட்டின் அண்டர் கிரவுண்டில் அந்த போலிஸ் துப்பாக்கியை வைக்க போக... அங்கே ஜோயியின் பிள்ளையும் பக்கத்து வீட்டு பையனும் விளையாடஇவன் வருவதை பார்த்து இருவரும் அமைதி கொள்கின்றனர்....துப்பாக்கி மறைத்து வைப்பதை பார்க்கும் பக்கத்து வீட்டு பையன் அந்த போலீஸ் துப்பாக்கியை எடுத்து கொள்கின்றான்... ரொம்ப நாளாக வளர்ப்பு அப்பா ரொம்ப படுத்தி எடுக்க அவரை அந்த துப்பாக்கியால் சுடுகின்றான்.... இந்த துப்பாக்கியின் அடுத்த குண்டு ஜோயி வீட்டு உள்ளேயும் வெடிக்க பிரச்சனை புரிந்து ஜோயி அந்த பையனை தேடி ஒடு அவன் துப்பாக்கியுடன் ஒட... போலீஸ் வர அதன் பிறகு நடக்கும் கதை நல்ல விறுவிறுப்பு....

படத்தின் சுவாரஸ்யங்களி் சில....
சின்ன வரிக்கதைக்கு இப்படி ஒரு ஆக்ஷன் சாயம் பூச முடியுமா? நன்றாகவே பூசி இருக்கின்றார்கள்...
எட்டாம் வகுப்பு படிக்கும் வரை “ங்கோத்தா” என்ற வார்த்தை என் வாயில் வரவே வராது.... ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதுதான் “ங்கோத்தா” “கொம்மா” போன்ற வார்த்தைகள் மெல்ல பேச ஆரம்பித்து இப்போது சில நேரக் கோபங்களில் “ங்கோத்தா” இல்லாமல் பேச முடியவில்லை... நன்றி சென்னை...
ஆனால் ஜோயின் சின்ன பையன் அம்மா, அப்பா எதிரில் கெட்டவார்த்தை பேசுவதையும் , எங்கள் நாட்டு பிள்ளைகள் எப்போதோ வெம்பி விட்டார்கள் என்பதை சொல்லாமல் சொல்லி இருப்பார்கள்....
படம் துப்பாக்கி யோடு காணமல் போகும் பக்கத்து வீட்டு பையனை தேடுவது என்றாலும் அவன் போய் மாட்டும் இடங்கள் எவ்லலாம் சஸ்பென்ஸ்...
குழந்தைகளை வைத்து புளுபிலிம் எடுக்கும் கும்பலையும் அந்த கும்பலின் வெளித்தோற்றங்களையும் மிக அழகாக பதிவு செய்து இருப்பார்கள்...
துப்பாக்கி வைத்து விட்டு வந்ததும் மனைவியிடம் செக்ஸ் வைத்துக்கொள்ளும் காட்சி ஒன்று இருக்கின்றது....அப்படி யே பேண்ட் நழுவியபடி ஜட்டியோடு கதாநாயகி நடந்து வந்து அடுப்பில்வெந்து கொண்டு இருக்கும் பொருளை எடுப்பது ஆங்கில படத்தில் மட்டும் சாத்தியம்

படத்தின் டைட்டில் போடும் காட்சி இந்த படத்தில் கிராபிக்சில் பயண் படுத்தி இருப்பார்கள்...
அதே போல் துப்பாக்கி சண்டை நடக்கும் முதல் காட்சி இயக்குனர் குவண்டின் ஸ்டைலில் படமாக்கி இருப்பார்கள்....

படத்தின் வெற்றிக்கு விறு விறுப்புக்கு முக்கியமானவர்கள் ஒளிப்பதிவாளர் Jim Whitaker மற்றும் இந்த படத்தின் எடிட்டர் .....
படத்தின் ஒரு வில்லன் துப்பாக்கி குறி பார்க்க அவன் கண்களில் இருக்கும் கண்ணாடியில் கேமரா ஜும் போக அப்படியே அவுட்டோர் காருக்கு மாற்றுவது அற்புதம்...
படத்தில் பக் என்ற ஆங்கில வார்த்தை அதிகம்... முக்கியமாக கிளைமாக்சில் டானோடு ஹீரோ பேசும் காட்சியில்....
காது கடித்தல், பாயின்ட் பிளாங்கில் துப்பாக்கி சுட்டு பாதி முகம் தெரித்தல் போன்ற பல வன்முறை காட்சிகள் படத்தில் உண்டு அதனால் கண்டிப்பாக 18 வயதுக்கு மேல்....

படம் முடிந்து விட்டது என்ற நீங்கள் ஏபந்தால் இன்னும் 10 நிமிடம் இருக்கின்றது என்ற சொல்லி உங்களை உட்காரா வைத்துவிடுவார்கள்... கிளைமாக்ஸ் நாம் யாரும் எதிர்பாராத ஒன்று...


.jpg)