Thursday, October 30, 2014

Killer

KILLERS-2014/ (18+)உலகசினிமா/ஜப்பான்/ தன் வினை தன்னைச்சுடும்.

கண்டிப்பாக வயது வந்தோருக்கான சைக்லாஜிக்கல் திரைப்படம்...
ஜப்பானின் லேட்டஸ்ட் சைக்கலாஜிக்கல் திரில்லர்...2014 பிப்ரிவரி ஒன்னாம் தேதி ரிலிஸ் ஆன  இந்த திரைப்படம்  உலகம் எங்கும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றது...

சைக்கலாஜிக்கல் திரைப்படம்தான் என்றாலும்  திரைப்படத்தையும் மீறி ஒரு  சைக்கோதனம் படம் நெடுகிலும் தொடர்வதோடு   படம் பார்க்கும் நமது எலும்புகளை சில்லிட வைக்கின்றது...

படம் பார்க்கும் போதே அந்த அதிர்வை நீங்கள்  நிச்சயம் உணர்வீர்கள்.
நிறைய சைக்கோ திரைப்படங்கள் வந்தாலும் ஒரு உயிரை துள்ள துடிக்க கத்தியால் கழுத்தை வெட்டி பல கோடி மக்கள் பார்க்கும் படி யூ டியுபில்  பார்க்கும் படி  செய்து அதனை ஒரு ரசனை  சார்ந்த விஷயமாக வெளிச்சம் போட்டு காட்டியவர்கள் மத தீவிரவாதிகள்தான்...

  சமீபத்தில் கூட   பத்திரிக்கையில்  வந்த செய்தியை படித்து உலகமே அதிர்ந்தது..
=====
அமெரிக்கா வான் தாக்குதல் நிகழ்தியதை எதிர்த்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஐஎஸ் ஐ எஸ் தீவிரவாதிகள் அமெரிக்கர்களை அச்சுறுத்தும் வகையில் அமெரிக்க பத்திரிக்கையாளர் ஒருவரை கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் உலகையே உலுக்கியது.
அவரை கொலை செய்வதற்கு முன்னர் தீவிரவாதிகள் அவரை விடுவிக்க பணயத்தொகையாக ரூ.800 கோடி கேட்டு மிரட்டியதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த குளோபல் டிரஸ்ட் என்ற பத்திரிகையில் நிருபராக பணியாற்றிய ஜேம்ஸ் போலே என்ற பத்திரிகையாளர் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளால் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வீடியோ இணையதளத்தில் வெளியாகி உலகையே அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
. இந்நிலையில் பத்திரிகை நிருபரின் கழுத்தை அறுத்து கொலை செய்தவர் பிரிட்டனை சேர்ந்த பயங்கரவாதி என்றும் கூறப்படுகிறது.
                                        =========
யோசித்து பாருங்கள் நிராயுதபாணி பினைக்கைதி என்ன செய்து விடு முடியும்..?? அதுவே பெண்கள் என்றால்..,?

ஜப்பானில் இருக்கும் சீரியல்  கில்லர்   நோமுரா... சிரியல் கில்லர்.. பெண்களை கடத்தி வந்த கட்டி போட்டு சுத்தியால் மண்டையில் அடித்து , அந்த அப்பாவி பெண்கள் துடி துடித்து சாவதை  இம்பி பிசகாமல் வீடியோ படம் எடுத்து அதனை யூ டியூடிபில்  வலையேற்றுவான்..  இதற்கு நிறைய லைக்குகள்...

அப்படியான இந்த வலைதளத்தில்  அவள் கொலை  செய்த பெண்களில் உயிர் துடிப்புகள் அத்தனையையும் வலையேற்றுவான்..
அப்படியே இந்த பக்கம் பாயு... பத்திரிக்கையாளன் மனைவி ஒர பெண் குழந்தையுடன் இந்தோனேஷியாவில் உள்ள ஜகார்தாவில் வசித்து வருபவன்..

நிறைய டென்ஷன்.. குடும்பத்தில்  மாமனாரால்  பிரச்சனை என்று   டிப்ரஷனில் இருக்கும் போது  நோமரா வலையேற்றும்  நேரடி  கொலை  சம்பவங்களை யூடியுப்பில் பார்க்கின்றான்... தர்மா என்ற அரசியல்வாதியால் அதிகம் பாதிக்கப்படுகின்றான்... நோமுரா போல நாமும் ஏன் கொல்லக்கூடாது என்று புத்தி பேதலித்து  யோசித்து  கொலை செய்ய செல்ல....

அவன் என்ன மாதிரியான பிரச்சனைகளை  அவனும் அவன் குடும்பத்தினரும் சந்தித்தார்கள் என்பதுதான் படத்தின் மீதிக்கதை..
ஒவ்வோரு கொலையும் கலை போல நோமுரா செய்யும் போது, அந்த கொலைகள் நேரடியாக நடைபெறுவது போல  தத்ரூபமாக படம் பிடித்து இருக்கின்றார்கள்....ஒரு உயிர் எப்படி அடங்கும் என்பதை  அனு அனுவாக   காட்டி யிருக்கின்றார்கள்...

இயக்குனர்கள் இது போன்ற ரெபரன்சுக்கு நிறைய  பத்திரிக்கையாளர்கள் கழுத்து அறுபட்டு   கொலை  செய்யப்பட்ட காட்சிகளை   பார்த்தே இவ்வளவு டீடெய்லாக  எடுத்து இருப்பார்கள் என்று நினைக்கின்றேன்...

Commitment

Commitment (2013)/உலக சினிமா/தென்கொரியா/ பாசமலர் உளவாளி,



  எப்படி இந்தியா பாகிஸ்தான்  ஒன்னா இருந்து… சுதந்திரம் கொடுக்கறேன்னு ரெண்டுத்தையும் பிரிச்சி வச்சிட்டு போனதில் இருந்து  இன்னைக்கு வரைக்கும் அடிச்சிக்கிட்டு மங்கம் மாய்கின்றோம்..

அதே போலதான்  ஒன்னா இருந்த நாடு  கொரியா… நம்மளை எப்படி பிரிட்டிஷ்காரன் மேல உட்கார்ந்துக்கிட்டு ரவுண்டு கட்டினானோ.. அது போல  கொரியாவை ஐப்பான்காரன்  காய் அடிச்சான்.. விளைவு சவுத்  கொரியா.,.. நார்த் கொரியான்னு பிரிஞ்சி போய் அடிச்சிக்கிட்டு இன்னைக்கு வரைக்கு கொய்யால  அடிச்சிக்கிட்டு சாவரனுங்க…

என்ன பண்றது… சில நேரத்துல சில நாடுகளோடு ஆக்கிரமிப்பும் அவர்கள்  பயண்படுத்தும் பிரித்தாளும் கொள்கையும் காலம் காலமாக  தொடர்வதும் அதற்காக பல உயிரிழப்புகள் மற்றும்  இராணுவ செலவுகளும் நினைத்துக்கூட பார்க்க முடியாதவை என்பேன்.

இது போதாதா  தென்  கொரிய காரர்களுக்கு கதை செய்ய…???? 2013 ஆம் ஆண்டு தென் கொரியாவில்  வெளியான ஸ்பை திரில்லர் திரைப்படம்தான்  கமிட்மென்ட்.

மத்திம வயதில் இருக்கும் வடகொரியாவின் உளவாளி தென்கொரியாவில் சுற்றி வளைக்கப்டுகின்றான்… வட கொரியா  அவனை கைவிட்டு விடுகின்றது… தென்கொரியாவில் அவன் சுட்டுக்கொள்ளப்படுகின்றான்.. சுட்டுக்கொள்ளப்பட்ட உளவாளிக்கு  ஆண் பெண் என இரண்டு பிள்ளைகள்… 

கொலைசெய்ப்பட்ட உளவாளியின்  பையன்தான் படத்தின் நாயகன்… நீயும்  உன தங்கையும் சுதந்திரமாக வாழ வேண்டும் என்றால் … நீ வடகொரியாவின் உளவாளியாக மாறி.... நாங்கள்  சொன்ன அசைன்மென்ட்டை முடிக்க வேண்டும்.. முடித்தவுடன் நீயும் உன் பாச  தங்கையும் சுதந்திரவானில் சிறகடித்து பறக்காலம் என்று ஆசை வார்த்தை காட்டி   வடகொரிய அதிகாரிகளின் தேன் ஓழுகும் பேச்சை நம்பி தென் கொரியாவில் தலைமை  சொல்லும் அத்தனைபேரையும் மாணவன் வேடத்தில்  பரலோகம் அனுப்புகின்றான்..

காரணம் தன் தங்கை உயிர் மற்றும் வாழ்க்கை அவர்கள் கையில்…அதனால் பிடிக்காத உளவாளி வேலையை  செய்கின்றான்… தென் கொரியாவில் அவனுக்கு ஒரு காதலி கிடைக்கின்றாள்… ஒரு கட்டத்தில்  தென்கொரிய போலிஸ் அவனை பிடிக்க துரத்துகின்றது… அவன் மற்றும் அவன், தங்கை, அவன் காதலி என்னவானார்கள் என்பதுதான் பரபரப்பான  கமிட்மேன்ட் படத்தின் மீதிக்கதை…

இது போன்ற ஆயிரம்  உளவாளி கதைகளை வைத்துக்கொண்டு ஆறு மாதத்துக்கு ஒரு கதை   செய்து ரசிகர்களை அட்ராசிட்டி செய்வதோடு தென்கொரியாவை ஒரு ஹீரோ நாடு போல பாவித்துக்கொள்ள இந்த திரைப்படங்கள் பேருதவி புரிகின்றன என்பதும் மறுக்க முடியாத உண்மை..

இந்த படம் பரபரப்புக்கு பஞ்சம் இல்லை என்றாலும் சைவம் என்றால் சரவணபவன் சாப்பாடு என்னும் அளவுக்கு திகட்ட வைக்கின்றது.. சில நேரத்தில்  இது போன்ற கதைகள் சுவாரஸ்யத்தை அதிகபடுத்துகின்றது என்பதும் உண்மை.. அந்த வகையில் இந்த திரைப்படத்தை கண்டிப்பாக பார்க்கலாம்.

Monday, August 18, 2014

Running scared

iday, September 11, 2009

(Running Scared)18+போலீஸ் துப்பாக்கியும்...இடைவிடாத துரத்தலும்....

பிரச்சனைகளை கண்ணுக்கு தெரிந்தால் களைந்து விடலாம் ஆனால் பிரச்சனை வரவே வராது என்ற திடமாக நம்பும் விஷயத்தில் பிரச்சனை வந்தால் எப்படி இருக்கும்...

நாம் சில கணக்குகள் போட்டு இருப்போம் அனால் அந்த கணக்கை தவிடு பொடி ஆக்கி நம் வாழ்க்கையையே புரட்டி போடும் நிகழ்வுகளை நாம் அறிந்து இருப்போம்..

நம் வீட்டு பிள்ளைகளால் பிரச்சனை வந்தாலே நம்மால் தாங்க முடியாது.. ஆனால் பக்கத்து வீட்டு பிள்ளையால் பிரச்சனை வந்தால் எப்படி இருக்கும் ஓங்கி ஒரு மி்தி மிதிக்கலாம் என்று தோன்றும் அல்லவா?... அதுவும் வாழ்நாள் முழுவதும் களி திங்க வேண்டிய பிரச்சனைதான் அதனை எப்படி தீர்க்கின்றான் என்பதுதான் ரன்னிங் ஸ்கிரேட் படத்தின் கதை...

Running Scared படத்தின் கதை இதுதான்......
Joey Gazelle (Paul Walker) ஒரு சின்ன லெவல் மாபியா கும்பல் கிட்ட வேலைபாக்குறவன்...போதை மருந்தையும் பணத்தையும் கைமாத்தும் போது , முகமுடி அணிந்த ஒரு கும்பல் இவர்களிடம் இருந்து போதை மருந்து மற்றும் ரொக்க பணத்தையும் துப்பாக்கி முனையில் மிரட்டி பறிக்கும் போது , வழக்கம் போல் துப்பாக்கி சண்டை நடக்க.. அதில் முகமுடி கும்பலை, ஜோயி வேலை செய்யும் மாபியா குழு துப்பாக்கி சண்டையில் வெற்றி பெற்று... முகமுடி அவுத்து பார்த்தால் அது கெட்ட போலிஸ்...

சரி என்று அந்த போலிஸ் பயண் படுத்திய துப்பாக்கியை பத்திரமாக ஜோயிடம் கொடுத்து வீட்டில் வைக்க சொல்லுகின்றான்... வீட்டின் அண்டர் கிரவுண்டில் அந்த போலிஸ் துப்பாக்கியை வைக்க போக... அங்கே ஜோயியின் பிள்ளையும் பக்கத்து வீட்டு பையனும் விளையாடஇவன் வருவதை பார்த்து இருவரும் அமைதி கொள்கின்றனர்....துப்பாக்கி மறைத்து வைப்பதை பார்க்கும் பக்கத்து வீட்டு பையன் அந்த போலீஸ் துப்பாக்கியை எடுத்து கொள்கின்றான்... ரொம்ப நாளாக வளர்ப்பு அப்பா ரொம்ப படுத்தி எடுக்க அவரை அந்த துப்பாக்கியால் சுடுகின்றான்.... இந்த துப்பாக்கியின் அடுத்த குண்டு ஜோயி வீட்டு உள்ளேயும் வெடிக்க பிரச்சனை புரிந்து ஜோயி அந்த பையனை தேடி ஒடு அவன் துப்பாக்கியுடன் ஒட... போலீஸ் வர அதன் பிறகு நடக்கும் கதை நல்ல விறுவிறுப்பு....

படத்தின் சுவாரஸ்யங்களி் சில....
சின்ன வரிக்கதைக்கு இப்படி ஒரு ஆக்ஷன் சாயம் பூச முடியுமா? நன்றாகவே பூசி இருக்கின்றார்கள்...

எட்டாம் வகுப்பு படிக்கும் வரை “ங்கோத்தா” என்ற வார்த்தை என் வாயில் வரவே வராது.... ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதுதான் “ங்கோத்தா” “கொம்மா” போன்ற வார்த்தைகள் மெல்ல பேச ஆரம்பித்து இப்போது சில நேரக் கோபங்களில் “ங்கோத்தா” இல்லாமல் பேச முடியவில்லை... நன்றி சென்னை...
ஆனால் ஜோயின் சின்ன பையன் அம்மா, அப்பா எதிரில் கெட்டவார்த்தை பேசுவதையும் , எங்கள் நாட்டு பிள்ளைகள் எப்போதோ வெம்பி விட்டார்கள் என்பதை சொல்லாமல் சொல்லி இருப்பார்கள்....

படம் துப்பாக்கி யோடு காணமல் போகும் பக்கத்து வீட்டு பையனை தேடுவது என்றாலும் அவன் போய் மாட்டும் இடங்கள் எவ்லலாம் சஸ்பென்ஸ்...

குழந்தைகளை வைத்து புளுபிலிம் எடுக்கும் கும்பலையும் அந்த கும்பலின் வெளித்தோற்றங்களையும் மிக அழகாக பதிவு செய்து இருப்பார்கள்...

துப்பாக்கி வைத்து விட்டு வந்ததும் மனைவியிடம் செக்ஸ் வைத்துக்கொள்ளும் காட்சி ஒன்று இருக்கின்றது....அப்படி யே பேண்ட் நழுவியபடி ஜட்டியோடு கதாநாயகி நடந்து வந்து அடுப்பில்வெந்து கொண்டு இருக்கும் பொருளை எடுப்பது ஆங்கில படத்தில் மட்டும் சாத்தியம்

படத்தின் டைட்டில் போடும் காட்சி இந்த படத்தில் கிராபிக்சில் பயண் படுத்தி இருப்பார்கள்...

அதே போல் துப்பாக்கி சண்டை நடக்கும் முதல் காட்சி இயக்குனர் குவண்டின் ஸ்டைலில் படமாக்கி இருப்பார்கள்....

படத்தின் வெற்றிக்கு விறு விறுப்புக்கு முக்கியமானவர்கள் ஒளிப்பதிவாளர் Jim Whitaker மற்றும் இந்த படத்தின் எடிட்டர் .....

படத்தின் ஒரு வில்லன் துப்பாக்கி குறி பார்க்க அவன் கண்களில் இருக்கும் கண்ணாடியில் கேமரா ஜும் போக அப்படியே அவுட்டோர் காருக்கு மாற்றுவது அற்புதம்...

படத்தில் பக் என்ற ஆங்கில வார்த்தை அதிகம்... முக்கியமாக கிளைமாக்சில் டானோடு ஹீரோ பேசும் காட்சியில்....

காது கடித்தல், பாயின்ட் பிளாங்கில் துப்பாக்கி சுட்டு பாதி முகம் தெரித்தல் போன்ற பல வன்முறை காட்சிகள் படத்தில் உண்டு அதனால் கண்டிப்பாக 18 வயதுக்கு மேல்....

படம் முடிந்து விட்டது என்ற நீங்கள் ஏபந்தால் இன்னும் 10 நிமிடம் இருக்கின்றது என்ற சொல்லி உங்களை உட்காரா வைத்துவிடுவார்கள்... கிளைமாக்ஸ் நாம் யாரும் எதிர்பாராத ஒன்று...

Friday, August 1, 2014

Young & Beautiful-2013(Jeune & Jolie) 

ரைட் படத்துக்கு வருவோம்...



எல்லோருக்கும் சில கனவுகள் இருக்கும்  இந்த படத்தோட நாயகி இசபெல்லாவுக்கு  செக்ஸ்சில் அதிக ஆர்வம்... அதே போல அன்பும் ஆதவுக்கும் ஏங்கி   நிக்கும்  கல்லூரிப்பெண்.

20 வயசு பொண்ணு..  செக்ஸ் பெரிய விஷயம்ன்னு நினைக்குது... ஒரு பாய் பிரண்டு   கூட படுக்கறா.... ஆனா அவன் முதல் முறையான்னு  கேள்வி கேட்டான்...  பயப்படாதேன்னு   சொல்லிட்டு மேட்டர்   பண்ணிட்டு எழுந்து போயிட்டான்... ச்சே இவ்வளவுதான் செக்சா? என்று வெறுத்து  போகின்றாள்  இசபெல்லா...

 ஆன்லைனில்   தன் பெயரை  முகம் தெரியாமல் பதிந்து   விபச்சாரியாக மாறுகின்றாள்.. வித விதமான கேரக்டர்கள் சந்திக்கின்றாள்... ,  முதலில் முகம் தெரியாத ஆனை  பார்க்க காத்து இருக்கும் அந்த எக்சப்டேஷன், அவளுக்கு ரொம்பவே பிடித்து போகின்றது.. வழியும் ஆண்,  மிருகதானமாக நடந்து கொள்ளும் ஆண் என்று நிறைய வெரைட்டியில் ஆண்களை பார்க்கின்றாள் ...

இசபெல்லா... யாருக்கும் தெரியாமல் செய்யும் விபச்சார வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய சிக்கலை சந்திக்கின்றாள்...ஜார்ஜ் என்ற வயதானவர்  இசபெல்லாவின்  ரெகுலர் கஸ்டமர்.

 இரண்டு பேரும் பலமுறை உடலுறவில் ஈடுபட்டு இருக்கின்றார்கள்..   

ஜார்ஜூக்கு இசபெல்லா வயதில் ஒரு மகள் இருக்கின்றாள்.. ஆனாலும் ஜார்ஜூக்கு இசபெல்லா ரெகுலர் கஸ்டமர்., 17 வயது இசபெல்லா பார்க்கும் கஸ்டமர்களிடம்  எல்லாம் தனக்கு 20 வயது என்று சொல்லி வருபவள்.

ஜார்ஜூம் இசபெல்லாவும்  உடலுறவின்  உச்சத்தில் ஈடுபட்டு இருக்கும்  பொழுது ஜார்ஜூக்கு   நெஞ்சவலி வந்து இறந்து போகின்றார்....   இசபெல்லா  விபச்சாரியாக  இருப்பது வீட்டுக்கு தெரிய  வருகின்றது...


 கவுன்சிலிங்க அழைத்து  செல்லுகின்றார்கள்..  ஆனாலும் இசபெல்லா  என்ன  முடிவு எடுக்கின்றாள் என்று படம் முடிகின்றது... ஆனாலும்   கடைசி  எழு நிமிடங்கள்  இருக்கும் காட்சி இருக்கின்றதே அது கவிதை.

 அது படத்தை பார்த்தால்தான் தெரியும்....  அதை விரிவாக எழுதலாம் என்று  நினைத்தேன்... அந்த கிளைமாக்ஸ்  காட்சியை  மட்டும் திரும்ப  தனிப்பதிவாக வேறு ஒரு நாளில்  எழுதுகின்றே.. ஆக்ஷூவலா  இந்த படத்தை அந்த காட்சியில் இருந்துதான் ஆரம்பிச்சி இருக்கனும் பட் அந்த  காட்சி  கிளைமாக்ஸ்   காட்சி  என்பதால்  சஸ்பென்ஸ் உடைக்க வேண்டாம் என்பதால் அதனை எழுதாமல் வேறு விஷயங்களில் இருந்து நுல் பிடித்துக்கொண்டு  எழுதி  வந்தேன்.

Marine Vacth இசபெல்லாவாக வாழ்ந்து இருக்கின்றார்... அவருக்கு தம்பியாக நடித்து இருக்கும்  பையன்..  உண்மையான டீன் ஏஜ் பசங்களில் கேள்விகளை முன் வைக்கின்றான்.  இரண்டு பேருமே மனதில்  நிற்கின்றார்.. சில   நிமிடங்களே  வந்த  ஜார்ஜின் மனைவி கேரக்டரும் மனதில்   நிற்கின்றார்கள்.

Friday, July 25, 2014

Oohalu Gusa Gusalade

Oohalu Gusa Gusalade

கிட்டத்தட்ட ஒரு மில்லியன் டிக்கெட் விற்று சாதனை படைத்திருப்பதாய் வெற்றி விழா கொண்டாடினார்கள் என்று இணையதளங்களில் படித்த போது எனக்கு தெரிந்து இந்தியாவில் இத்தனை டிக்கெட் விற்று சாதனை என்று விழா கொண்டாடிய படம் இதுவாகத்தான் இருக்குமென்று தோன்றியது. படம் சில வாரங்களுக்கு முன்னமே ஆந்திராவில் வெளியாகி வெற்றிபடமாய் அறிவிக்கப்பட்டது என்று சொன்னார்கள். பெரிய நடிகர்கள், வாரிசு நடிகர்களின் படங்களைத் தவிர மற்ற படங்களை ஓட விடமாட்டேன் என்கிறார்கள் என்று தெலுங்கு திரையுலகமே புலம்பிக் கொண்டிருப்பதாய் ஒர் செய்தி வேறு உலா  வந்து கொண்டிருக்கும் வேளையில் இப்படத்தின் வெற்றி புருவம் உயர்த்தி கவனிக்க செய்தது. 

ரொம்ப சிம்பிளான கதை. ஹீரோ எப்பாடு பட்டாவது ஒர் டிவி நியூஸ் ரீடயாய் ஆவதுதான் தன் வாழ்க்கை குறிக்கோள் என்று அலைபவன். விசாகபட்டினத்திற்கு மாமா வீட்டில் தங்கியிருக்கும் போது அங்கே வரும் டெல்லி பெண்ணை பார்த்த மாத்திரத்தில் காதலிக்க ஆர்மபிக்க, அவளோ, எனக்கு நீ ஸ்பெஷல்தான் பட்.. அதுக்கு ஏன் காதல் அது இதுன்னு பெயர் வச்சிக்கணும் கொஞ்சம் செட்டிலாகி அப்புறம் முடிவு செய்வோம்னு சொல்ல, வழக்கம் போல ஹீரோ அவளையும்,அவளோட டெல்லி வளர்ப்பு குடும்ப எல்லாத்தையும் கலாய்ச்சிட்டு ரெண்டு பேரும் பிரிஞ்சிடுறாங்க. சில வருடங்களுக்கு பின் ஒரு டிவி சேனலில் வேலைக்கு சேர, சேனலின் சி.ஈ.ஓவிற்கு ஹீரோயினை பெண் பார்க்க, அவளின் அழகில் மயங்கிய சி.ஈ.ஓ எப்படியாவ்து அவளை இம்ப்ரஸ் செய்ய  முயல்கிறான். பெண்களிடம் பேசி பழகி செட் ஆக்க முடியாத அவன், தன்னிடம் வேலை பார்க்கும் ஹீரோவிடம் ஐடியா கேட்டு அவளை இம்ப்ரஸ் செய்ய முயல்கிறான். இடையில் ஹீரோவும், ஹீரோயினும் சந்தித்துவிட, பின்பு என்ன ஆனது என்பதுதான் கதை. 

கொஞ்சம் மின்சாரக் கனவு, கொஞ்சம் அடுத்த வீட்டுப் பெண், கொஞ்சம் எட்டி மர்பி ஸ்டைல் நடிப்பு, அபரிமிதமான இளமை இவையெல்லாவற்றையும் ஒரு குடுவையில் போட்டு ஆட்டி எங்கேஜிங்கான படமாய் வந்திருப்பதால்தான் இப்படத்தின் வெற்றி என தோன்றுகிறது. ஹீரோ நாக செளரியா அழகாய் இருக்கிறார்.  மீசையில்லாத ஸ்டபுள் லுக்கைவிட, தாடி மீசையுடன் நன்றாக இருக்கிறார். ஓரளவுக்கு  நடிக்கவும் செய்கிறார். ஹீரோயின் ராக்‌ஷி கன்னா. செம்ம அழகு. கொஞ்சம் ட்ரீமியாய் கண்கள். அழகாய் தெரியவும், அழகாய் இருப்பதைத் தவிர பெரிய வேலையேதுமில்லை. பாராட்டப்பட வேண்டிய நடிப்பு என்றால் அது இயக்குனர் ஸ்ரீனிவாஸ் அவசாரலாவின் நடிப்பு மற்றும் திரைகதை இயக்கத்தைத்தான். கொஞ்சம் ஃபன்னியான பாடி லேங்குவேஜுடன், எட்டிமர்பி தனத்துடனான நடிப்பு. சிறப்பாக செய்திருக்கிறார்.  ப்ரெஞ்ச் நாடகத்தின் தழுவல் என்று சொல்லப்பட்டாலும் பல தமிழ், தெலுங்கு திரைப்படங்களின் அப்பட்டமான ரீமேக் காட்சிகள் படம் நெடுக இருக்கிறது. ஆனாலும் ப்ரெஷ்ஷான கேஸ்டிங்,  கல்யானின் மெலடியான இசை, வெங்கட் சி திலிப்பின் ஒளிப்பதிவு எல்லாம் சேர்ந்து ஒர் ஃபீல் குட் காமெடி படமாய் அமைந்துவிட்டது.

Tuesday, July 15, 2014

The dark knight rises

THE DARK KNIGHT FALLS ச்ச சாரிbaa... RISES ஊர்ல உள்ளவங்களுக்கெல்லாம் ஒரு கஷ்டம்னா பேட்மேன் வந்து காப்பாத்துவாரு.. ஆனா அந்த ஆளுக்கே ஒரு கஷ்டம்னா யார்க்கிட்ட போவாரு... முட்டிய மடக்கிட்டு அந்தாள குத்துறாய்ங்கய்யா குத்து படத்துல .. பாக்கவே பாவமா இருக்காரு... இந்த படத்துல அவர காப்பாத்திக்கவே அவருக்கு நேரம் போதல.... அப்புறம் எங்க ஊர்மக்கள காப்பாத்துறது. முதல் ரெண்டு பகுதிகளோட தாக்கத்தால முன்பதிவுல புதிய சாதனை படைச்சிருக்க படம் இந்த அளவு எதிர்பார்ப்ப பூர்த்தி பண்ணிருக்கான்னா கண்டிப்பா இல்லைன்னு தான் சொல்லனும். பேட்மேன்ங்கற கேரக்டர அதிகம் காட்டாம சைடுல வர்ற மத்தவங்களே முக்காவாசி படத்த ஓட்டிகிட்டு இருக்காங்க. படத்தோட முதல் காட்சியே படு மிரட்டலா எடுத்திருந்ததும் படம் பட்டைய கெளப்பப்போவுது நெனைச்சேன்... ம்ஹூம்... First half தாங்காது... முக்காவாசி நேரம் கான்வர்சேஷன்லயே போயிட்டு இருக்கு. பேட்மேனோட intro scene படு மிரட்டலா இருந்தாலும், அதுக்கப்புறம் பேட்மேன வில்லன் குருப்பு மூத்தர சந்துக்குள்ள விட்டு கும்மு கும்முன்னு கும்மி டம்மி ஆக்கிருறாங்க. யோவ் நீ அவிங்ககிட்ட அடி வாங்குறத பாக்குறதுக்காய்யா வந்தோம்? வில்லன் ஒரு செம கப்பி... இவிங்க வாயத்தொறந்து இங்கிலீஷ் பேசுனாலே நமக்கு ஒரளவு தான் புரியும். இதுல அந்தாளு மூஞ்சில மாஸ் போட்டுக்கிட்டு, கர கரன்னு பேசுறது செம கடுப்பா இருக்கு. அதோட இந்தாளு நம்ம தமிழ் படங்கள்ல பெரிய பெரிய வில்லன்களுக்கு அடியாள வர்றவிங்க மாதிரி தான் இருக்காரு..சுருக்கமா ஆளவந்தான் வில்லன் கமல் மாதிரின்னு சொல்லலாம். பாக்குறவிங்களயெல்லாம் தூக்கிபோட்டு மிதிக்கிறது.. கழுத்த திருவி கொல்றதுன்னு... மாட்டுத்தனமா அடிக்கிறாறே தவற... ஒரு fire இல்லையேப்பா. ஃபயரு ஃபயரு... ஆனா second half la அவர் பத்தின ஃப்ளாஷ்பேக் சொல்லும்போது வில்லன்ங்குறத தாண்டி ஒரு ஹீரோ பேட்மேன்... The dark Knight பாத்ததுலருந்து இவர தூம் அபிஷேக் பச்சன்னு தான் கூப்புடுவேன்.. ஏனா? சும்மா படத்துல டம்மியா வந்துட்டு போறதாலதான். இந்த படத்துலயும் அதே தான். முக்காவாசி நேரம் உடம்பு சரி இல்லாதவரா, அடிவாங்கிட்டு இருக்காரு. ஆனா சில பேட்மேனா வர்ற சில காட்சிகள்ல விசிலடிக்க வச்சிடுறாரு. வில்லன் முதல் பாதில இவர அடிச்சிபோட்டுட்டு இவர்ட்ட "you have to see gotham goes into ashes.. then you will have my permission to die" ன்னு சொல்ற வசனத்த இரண்டாம் பாதில வில்லன அடிச்சிபோட்டு இவரு அவன்கிட்ட "you tell me where the trigger is and you will have my permission to die" சொல்றது மாஸ்ஸூ.. வேறென்ன இதெல்லாம் நம்ம தலைவர் பட ஸ்டைல்தான். படத்தோட பெரிய ப்ளஸ் என்னன்னு பாத்தா கடைசி அரைமணி நேரம்னு சொல்லலாம். ஆக் ஷன் செண்டிமெண்ட், ட்விஸ்ட்ன்னு பட்டைய கெளப்பி, முதல் பாதில கோட்ட விட்டதயெல்லாம் தூக்கி நிறுத்துறாங்க. க்ளைமாக்ஸ் இன்னும் செம. பேட்மேன் கூட இருக்க தாத்தாவ எனக்கு ரொம்ப புடிக்கும். ஏன்னா.. அவரு ஒருத்தர்தான் ஒவ்வொரு வார்த்தையும் அழுத்தமா புரியிறமாதிரி பேசுவாறு. கில்லி படத்த காப்பாத்துறதுக்கு எப்புடி ஒரு ப்ரகாஷ்ராஜ் இருந்தாரோ அதே மாதிரி The Dark Knight படத்த காப்பாத்த ஒரு ஜோக்கர் இருந்தாரு. அந்த மாதிரி ஒரு கேரக்டர் இல்லாம இருந்தா அந்த படமும் ஒரு சுமாரான படம் தான். அதே தான் இங்கயும் நடந்துருக்கு... திரைக்கதையெல்லாம் முன்னாடி மாதிரிதான் இருக்கு. ஆனா ஸ்பெஷலா எதுவும் இல்லாததால the Dark Knight ஏற்படுத்திய தாக்கத்த இந்த படம் ஏற்படுத்துறது கஷ்டம் தான். இந்த படத்த ஒரு வார்த்தையில சுமார்ன்னு சொல்லிட முடியாது. அப்படி இல்லைன்னு நிரூபிக்க நிறைய காட்சிகள் இருக்கு. அதே மாதிரி சூப்பர் படம்னு சொல்லமுடியாது. சரி ஏண்டா இப்புடி ஒளருறன்னு கேக்குறீங்க அதானா.... ஒரே கன்பீசன்பா.. சரி நீங்க பாத்துட்டு சொல்லுங்களேன்