Friday, July 25, 2014

Oohalu Gusa Gusalade

Oohalu Gusa Gusalade

கிட்டத்தட்ட ஒரு மில்லியன் டிக்கெட் விற்று சாதனை படைத்திருப்பதாய் வெற்றி விழா கொண்டாடினார்கள் என்று இணையதளங்களில் படித்த போது எனக்கு தெரிந்து இந்தியாவில் இத்தனை டிக்கெட் விற்று சாதனை என்று விழா கொண்டாடிய படம் இதுவாகத்தான் இருக்குமென்று தோன்றியது. படம் சில வாரங்களுக்கு முன்னமே ஆந்திராவில் வெளியாகி வெற்றிபடமாய் அறிவிக்கப்பட்டது என்று சொன்னார்கள். பெரிய நடிகர்கள், வாரிசு நடிகர்களின் படங்களைத் தவிர மற்ற படங்களை ஓட விடமாட்டேன் என்கிறார்கள் என்று தெலுங்கு திரையுலகமே புலம்பிக் கொண்டிருப்பதாய் ஒர் செய்தி வேறு உலா  வந்து கொண்டிருக்கும் வேளையில் இப்படத்தின் வெற்றி புருவம் உயர்த்தி கவனிக்க செய்தது. 

ரொம்ப சிம்பிளான கதை. ஹீரோ எப்பாடு பட்டாவது ஒர் டிவி நியூஸ் ரீடயாய் ஆவதுதான் தன் வாழ்க்கை குறிக்கோள் என்று அலைபவன். விசாகபட்டினத்திற்கு மாமா வீட்டில் தங்கியிருக்கும் போது அங்கே வரும் டெல்லி பெண்ணை பார்த்த மாத்திரத்தில் காதலிக்க ஆர்மபிக்க, அவளோ, எனக்கு நீ ஸ்பெஷல்தான் பட்.. அதுக்கு ஏன் காதல் அது இதுன்னு பெயர் வச்சிக்கணும் கொஞ்சம் செட்டிலாகி அப்புறம் முடிவு செய்வோம்னு சொல்ல, வழக்கம் போல ஹீரோ அவளையும்,அவளோட டெல்லி வளர்ப்பு குடும்ப எல்லாத்தையும் கலாய்ச்சிட்டு ரெண்டு பேரும் பிரிஞ்சிடுறாங்க. சில வருடங்களுக்கு பின் ஒரு டிவி சேனலில் வேலைக்கு சேர, சேனலின் சி.ஈ.ஓவிற்கு ஹீரோயினை பெண் பார்க்க, அவளின் அழகில் மயங்கிய சி.ஈ.ஓ எப்படியாவ்து அவளை இம்ப்ரஸ் செய்ய  முயல்கிறான். பெண்களிடம் பேசி பழகி செட் ஆக்க முடியாத அவன், தன்னிடம் வேலை பார்க்கும் ஹீரோவிடம் ஐடியா கேட்டு அவளை இம்ப்ரஸ் செய்ய முயல்கிறான். இடையில் ஹீரோவும், ஹீரோயினும் சந்தித்துவிட, பின்பு என்ன ஆனது என்பதுதான் கதை. 

கொஞ்சம் மின்சாரக் கனவு, கொஞ்சம் அடுத்த வீட்டுப் பெண், கொஞ்சம் எட்டி மர்பி ஸ்டைல் நடிப்பு, அபரிமிதமான இளமை இவையெல்லாவற்றையும் ஒரு குடுவையில் போட்டு ஆட்டி எங்கேஜிங்கான படமாய் வந்திருப்பதால்தான் இப்படத்தின் வெற்றி என தோன்றுகிறது. ஹீரோ நாக செளரியா அழகாய் இருக்கிறார்.  மீசையில்லாத ஸ்டபுள் லுக்கைவிட, தாடி மீசையுடன் நன்றாக இருக்கிறார். ஓரளவுக்கு  நடிக்கவும் செய்கிறார். ஹீரோயின் ராக்‌ஷி கன்னா. செம்ம அழகு. கொஞ்சம் ட்ரீமியாய் கண்கள். அழகாய் தெரியவும், அழகாய் இருப்பதைத் தவிர பெரிய வேலையேதுமில்லை. பாராட்டப்பட வேண்டிய நடிப்பு என்றால் அது இயக்குனர் ஸ்ரீனிவாஸ் அவசாரலாவின் நடிப்பு மற்றும் திரைகதை இயக்கத்தைத்தான். கொஞ்சம் ஃபன்னியான பாடி லேங்குவேஜுடன், எட்டிமர்பி தனத்துடனான நடிப்பு. சிறப்பாக செய்திருக்கிறார்.  ப்ரெஞ்ச் நாடகத்தின் தழுவல் என்று சொல்லப்பட்டாலும் பல தமிழ், தெலுங்கு திரைப்படங்களின் அப்பட்டமான ரீமேக் காட்சிகள் படம் நெடுக இருக்கிறது. ஆனாலும் ப்ரெஷ்ஷான கேஸ்டிங்,  கல்யானின் மெலடியான இசை, வெங்கட் சி திலிப்பின் ஒளிப்பதிவு எல்லாம் சேர்ந்து ஒர் ஃபீல் குட் காமெடி படமாய் அமைந்துவிட்டது.

Tuesday, July 15, 2014

The dark knight rises

THE DARK KNIGHT FALLS ச்ச சாரிbaa... RISES ஊர்ல உள்ளவங்களுக்கெல்லாம் ஒரு கஷ்டம்னா பேட்மேன் வந்து காப்பாத்துவாரு.. ஆனா அந்த ஆளுக்கே ஒரு கஷ்டம்னா யார்க்கிட்ட போவாரு... முட்டிய மடக்கிட்டு அந்தாள குத்துறாய்ங்கய்யா குத்து படத்துல .. பாக்கவே பாவமா இருக்காரு... இந்த படத்துல அவர காப்பாத்திக்கவே அவருக்கு நேரம் போதல.... அப்புறம் எங்க ஊர்மக்கள காப்பாத்துறது. முதல் ரெண்டு பகுதிகளோட தாக்கத்தால முன்பதிவுல புதிய சாதனை படைச்சிருக்க படம் இந்த அளவு எதிர்பார்ப்ப பூர்த்தி பண்ணிருக்கான்னா கண்டிப்பா இல்லைன்னு தான் சொல்லனும். பேட்மேன்ங்கற கேரக்டர அதிகம் காட்டாம சைடுல வர்ற மத்தவங்களே முக்காவாசி படத்த ஓட்டிகிட்டு இருக்காங்க. படத்தோட முதல் காட்சியே படு மிரட்டலா எடுத்திருந்ததும் படம் பட்டைய கெளப்பப்போவுது நெனைச்சேன்... ம்ஹூம்... First half தாங்காது... முக்காவாசி நேரம் கான்வர்சேஷன்லயே போயிட்டு இருக்கு. பேட்மேனோட intro scene படு மிரட்டலா இருந்தாலும், அதுக்கப்புறம் பேட்மேன வில்லன் குருப்பு மூத்தர சந்துக்குள்ள விட்டு கும்மு கும்முன்னு கும்மி டம்மி ஆக்கிருறாங்க. யோவ் நீ அவிங்ககிட்ட அடி வாங்குறத பாக்குறதுக்காய்யா வந்தோம்? வில்லன் ஒரு செம கப்பி... இவிங்க வாயத்தொறந்து இங்கிலீஷ் பேசுனாலே நமக்கு ஒரளவு தான் புரியும். இதுல அந்தாளு மூஞ்சில மாஸ் போட்டுக்கிட்டு, கர கரன்னு பேசுறது செம கடுப்பா இருக்கு. அதோட இந்தாளு நம்ம தமிழ் படங்கள்ல பெரிய பெரிய வில்லன்களுக்கு அடியாள வர்றவிங்க மாதிரி தான் இருக்காரு..சுருக்கமா ஆளவந்தான் வில்லன் கமல் மாதிரின்னு சொல்லலாம். பாக்குறவிங்களயெல்லாம் தூக்கிபோட்டு மிதிக்கிறது.. கழுத்த திருவி கொல்றதுன்னு... மாட்டுத்தனமா அடிக்கிறாறே தவற... ஒரு fire இல்லையேப்பா. ஃபயரு ஃபயரு... ஆனா second half la அவர் பத்தின ஃப்ளாஷ்பேக் சொல்லும்போது வில்லன்ங்குறத தாண்டி ஒரு ஹீரோ பேட்மேன்... The dark Knight பாத்ததுலருந்து இவர தூம் அபிஷேக் பச்சன்னு தான் கூப்புடுவேன்.. ஏனா? சும்மா படத்துல டம்மியா வந்துட்டு போறதாலதான். இந்த படத்துலயும் அதே தான். முக்காவாசி நேரம் உடம்பு சரி இல்லாதவரா, அடிவாங்கிட்டு இருக்காரு. ஆனா சில பேட்மேனா வர்ற சில காட்சிகள்ல விசிலடிக்க வச்சிடுறாரு. வில்லன் முதல் பாதில இவர அடிச்சிபோட்டுட்டு இவர்ட்ட "you have to see gotham goes into ashes.. then you will have my permission to die" ன்னு சொல்ற வசனத்த இரண்டாம் பாதில வில்லன அடிச்சிபோட்டு இவரு அவன்கிட்ட "you tell me where the trigger is and you will have my permission to die" சொல்றது மாஸ்ஸூ.. வேறென்ன இதெல்லாம் நம்ம தலைவர் பட ஸ்டைல்தான். படத்தோட பெரிய ப்ளஸ் என்னன்னு பாத்தா கடைசி அரைமணி நேரம்னு சொல்லலாம். ஆக் ஷன் செண்டிமெண்ட், ட்விஸ்ட்ன்னு பட்டைய கெளப்பி, முதல் பாதில கோட்ட விட்டதயெல்லாம் தூக்கி நிறுத்துறாங்க. க்ளைமாக்ஸ் இன்னும் செம. பேட்மேன் கூட இருக்க தாத்தாவ எனக்கு ரொம்ப புடிக்கும். ஏன்னா.. அவரு ஒருத்தர்தான் ஒவ்வொரு வார்த்தையும் அழுத்தமா புரியிறமாதிரி பேசுவாறு. கில்லி படத்த காப்பாத்துறதுக்கு எப்புடி ஒரு ப்ரகாஷ்ராஜ் இருந்தாரோ அதே மாதிரி The Dark Knight படத்த காப்பாத்த ஒரு ஜோக்கர் இருந்தாரு. அந்த மாதிரி ஒரு கேரக்டர் இல்லாம இருந்தா அந்த படமும் ஒரு சுமாரான படம் தான். அதே தான் இங்கயும் நடந்துருக்கு... திரைக்கதையெல்லாம் முன்னாடி மாதிரிதான் இருக்கு. ஆனா ஸ்பெஷலா எதுவும் இல்லாததால the Dark Knight ஏற்படுத்திய தாக்கத்த இந்த படம் ஏற்படுத்துறது கஷ்டம் தான். இந்த படத்த ஒரு வார்த்தையில சுமார்ன்னு சொல்லிட முடியாது. அப்படி இல்லைன்னு நிரூபிக்க நிறைய காட்சிகள் இருக்கு. அதே மாதிரி சூப்பர் படம்னு சொல்லமுடியாது. சரி ஏண்டா இப்புடி ஒளருறன்னு கேக்குறீங்க அதானா.... ஒரே கன்பீசன்பா.. சரி நீங்க பாத்துட்டு சொல்லுங்களேன்